காடப்பநல்லுாரில்கோவில் நிலம் அளவீடு
காடப்பநல்லுாரில்கோவில் நிலம் அளவீடுபவானி,: அம்மாபேட்டை அருகேயுள்ள காடப்பநல்லுாரில், அத்தனுாரம்மன் மற்றும் சொக்கநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமாக அதே பகுதியில், 10 ஏக்கர் நிலம் உள்ளது. நிலம் மற்றும் கோவில் அமைவிடங்கள் அளவீட்டு பணி நேற்று நடந்தது.அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள் தாசில்தார் சங்கர்கணேஷ், ஓய்வு பெற்ற துணை கலெக்டர் குப்புசாமி மேற்பார்வையில் எல்லைக் கல் நடப்பட்டது. ஓய்வு வி.ஏ.ஓ., அழகுராஜன், நில அளவையாளர் கார்த்திக், செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் அளவீட்டு பணியில் ஈடுபட்டனர்.