உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சியில் குடிநீர்வினியோகம் பாதிப்பு

மாநகராட்சியில் குடிநீர்வினியோகம் பாதிப்பு

மாநகராட்சியில் குடிநீர்வினியோகம் பாதிப்புஈரோடு,:ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு, ஊராட்சி கோட்டையில் இருந்து தண்ணீர் உறிஞ்சி சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன் ஊராட்சி கோட்டை குடிநீரேற்று நிலைய மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் குடிநீரை உறிஞ்ச முடியாமல் குடிநீர் வினியோகம் தடைபட்டது. நேற்று வரை மோட்டார் பழுது முழுமையாக நீக்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல், மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ