மேலும் செய்திகள்
தமிழ்நாடு மின் ஊழியர்மத்திய அமைப்பினர் தர்ணா
26-Feb-2025
மின் ஊழியர்கள் தர்ணாஈரோடு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, ஈ.வி.என்., சாலை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மின் வாரியத்தில் ஆரம்ப கட்டங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. கேங்மேன் பதவியை கள உதவியாளர் பதவியாக மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். துணை தலைவர்கள் லோகசாமி, சண்முகம், சக்திவேல், துணை செயலாளர்கள் தமிழரசன், ஏழுமலை, ரகுராமன் உட்பட பலர் பேசினர்.
26-Feb-2025