மேலும் செய்திகள்
அழுகிய நிலையில் பெயின்டர் சடலம் மீட்பு
01-Mar-2025
பிரிந்து வாழ்ந்த ஊழியர்மர்மச்சாவால் அதிர்ச்சிபவானி:கோபி அருகே சிறுவலுார், குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் சுதா, 44; இவரின் கணவர் விஜயகுமார், 49; சித்தோடு தனியார் நிறுவன ஊழியர். சில மாதங்களுக்கு முன் கோபியை சேர்ந்த கீதாவுடன் விஜயகுமாருக்கு ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் விஜயகுமார் மனைவியை பிரிந்து, லட்சுமிநகரில் கீதாவுடன் வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் விஜயகுமார் நேற்று முன்தினம் முதல் கதவை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதாக தகவல் கிடைத்தது. சுதா அங்கு சென்று, கதவை உடைத்து பார்த்தபோது விஜயகுமார் மயங்கி கிடந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Mar-2025