உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி வழிபாடு

நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி வழிபாடு

நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி வழிபாடுசென்னிமலை:சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் பாலதொழுவு ஊராட்சியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. சுயம்புலிங்கமாக தோன்றிய நஞ்சுண்டேஸ்வரருக்கு, கண்ணடக்கம், கண் மலர் காணிக்கையாக வழங்கி வழிபட்டால் தோல் நோய்கள் குணமாகும் என நம்பிக்கை.கோவிலில் பங்குனி மற்றும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் மட்டுமே சிறப்பு வழிபாடு நடக்கும். இதன்படி பங்குனி மாத முதல் திங்கட்கிழமையான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. நஞ்சுண்டேஸ்வரர், பழனி ஆண்டவருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அப்போதே நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல ஈரோடு மட்டுமின்றி திருப்பூர் பக்தர்களும் வரத்தொடங்கினர். ஆயிரக்கணக்கானோர் வந்ததால், தரிசனம் செய்ய மூன்று மணி நேரமானது. நீண்ட வரிசையில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் காத்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி பகுதிகளில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை