உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சிஈரோடு:ஈரோடு எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை சுமதி தலைமை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர் பாரதி பிரபு, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சிறந்த மாதிரிகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறந்த படைப்புகளுக்கு, முதல் ஆறு பரிசுகளும் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் ஆர்வத்துடன் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியை மல்லிகா, கணினி ஆசிரியை கவிதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ