உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மர்ம விலங்கு பீதிகேமராக்கள் அமைப்பு

மர்ம விலங்கு பீதிகேமராக்கள் அமைப்பு

மர்ம விலங்கு பீதிகேமராக்கள் அமைப்புதாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சூரியநல்லுார், செம்மம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் ஆடுகள், அவ்வப்போது மாயமாகி வந்தது. வனப்பகுதியில் இருந்து, நரிகள் ஊடுருவி ஆடுகளை கொண்டு செல்வதாக, மக்களிடையே பீதி நிலவியது. இதையடுத்து, செம்மம்பாளையம் பகுதியில், வனத்துறை அதிகாரி சுகன்யா தலைமையிலான குழுவினர், நேற்று மரத்தில் கேமராவை பொருத்தினர். இதன் மூலம், அப்பகுதியில் மர்ம விலங்குகள் நடமாட்டம் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, விவசாயிகளிடையே அவர்கள் உறுதி கூறியுள்ளனர். மேலும், அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'கேமரா அமைத்தால் மட்டும் போதாது, விலங்குகளை பிடிக்க, கூண்டுகளை அமைக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை