மேலும் செய்திகள்
கவுந்தப்பாடி அருகே மறியல்
14-Mar-2025
சிறுமி மாயம்: தந்தை புகார்ஈரோடு:ஈரோடு, மாணிக்கம்பாளையம், மாரியம்மன் கோவில் பின்புறம் சின்னசாமி காம்ப்ளக்சை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் ஷேக். ஹோட்டல் வைத்துள்ளார். இவர் மகள் நஸ்ரின், 16; ஹோட்டலில் தந்தைக்கு உதவியாக இருந்தார். நேற்று முன்தினம் காலை, அரபு கிளாசுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.* கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் லதா, 29; இவரின் கணவர் குருநாதன், 32; கருத்து வேறுபாடால் மூன்று மாதமாக கணவரை பிரிந்து, கோபியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில் மனைவி மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மாமியாரிடம் விசாரித்தும் உரிய பதில் இல்லை. எனவே மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, குருநாதன் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
14-Mar-2025