நந்தா கல்லுாரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ
நந்தா கல்லுாரிகளில் கேம்பஸ் இன்டர்வியூஈரோடுநந்தா பொறியியல், தொழில் நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இறுதி ஆண்டு முடித்த மாணவர்களுக்கு, வளாகத் தேர்வு நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார்.மின்னணு மற்றும் தொடர்பியல் துறை நிறுவனமான டேட்டா பார்டெர்ன் நிறுவனத்தினர் நேர்காணல் நடத்தினர். நிறுவனத்தின் மனிதவள மேலாளர் உதயகுமார் விழாவை தொடங்கி வைத்தார். பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில் நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் மனோகரன் ஆகியோர், வளாகத்தேர்வில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினர்.தேர்வுக்கு ஏற்பாடு செய்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை ஆசிரியர்களுக்கு, ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா தொழில் நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி வாழ்த்து தெரிவித்தனர்.வி.இ.டி., கலை கல்லுாரியில் சாதனையாளர்களுக்கு கவுரவம்ஈரோடு:ஈரோடு அருகே திண்டலில் உள்ள, வி.இ.டி., கலை கல்லுாரியில் சாதனையாளர் விழா நடந்தது. கல்வி சார்ந்த சாதனை புரிந்த மாணவர் மற்றும் பேராசிரியர்களுக்கு சான்றிதழ், பதக்கம், பரிசுத்தொகை மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சென்னியப்பன், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சிவானந்தன், ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்வராஜ், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமையுரை ஆற்றினார். கல்லுாரி தாளாளர் சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார். பல்கலை தேர்வில் தங்கப்பதக்கம் வென்ற இரு மாணவர், தரநிலை பட்டியலில் உள்ள ஒன்பது மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மிகச்சிறந்த மாண வர்கள் துறைவாரியாகவும், ஒட்டுமொத்த கல்லுாரி அளவிலும் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சி.ஏ., - சி.எம்.ஏ., - ஏ.சி.சி.ஏ., அடிப்படை தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பேராசிரியர் விருதுகளும் வழங்கப்பட்டன.