வாய்க்காலில் குளித்தவர்நீரின் வேகத்தால் பலி
வாய்க்காலில் குளித்தவர்நீரின் வேகத்தால் பலிடி.என்.பாளையம், கோவை மாவட்டம் கள்ளுக்குளி கீழநத்துாரை சேர்ந்தவர் மணிகண்டன், 32; எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்தார். பெரியகொடிவேரி நஞ்சன் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று காலை, 11:45 மணியளவில் மணிகண்டன், உறவினர் குடும்பத்தினருடன் கொடிவேரி பவானி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் தண்ணீர் வெளியேறி வாய்க்கால் வழியாக வரும் இடத்தில் இறங்கி குளித்துள்ளார். அப்போது ஆற்று நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த உறவினர்கள் கூக்குரலிட்டனர். தகவலின்படி சென்ற சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு மணிகண்டன் சடலத்தை மீட்டனர்.