உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

மாநகரில் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

ஈரோடு, தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன், மக்கள் தீபாவளியை கொண்டாடினர். பெரும்பாலான பெண்கள் அதிகாலை எழுந்து வாசலில் கோலமிட்டு குளித்தனர். பிறகு குடும்ப உறுப்பினர்களை எழுப்பி, குளிக்க வைத்து, புத்தாடை அணிய செய்தனர். வீடுகளில் இருந்த பெரியர்வர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். வீட்டு வாசலிலும், பொது இடங்களிலும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஒரு சிலர் கோவில்களுக்கு சென்றனர். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் சினிமாவுக்கும், பூங்கா போன்ற பொழுது போக்கு இடங்களுக்கும் சென்று தீபாவளியை ரிலாக்சாக கொண்டாடினர். தல தீபாவளியாக அமைந்த ஆண்கள், தங்கள் வீடுகளில் மனைவியுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். வீட்டு பலகாரங்களை அக்கம்பக்கத்தினருக்கு வழங்கியும், பெற்றும், தீபாவளி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்திலும், மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.சென்னிமலையில் குவிந்த பக்தர்கள்சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்தபடியே இருந்தனர். இதனால் தேவஸ்தானம் சார்பில் கோவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வந்ததால் மலை அடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தனியார் பாதுகாப்பு வீரர்கள் போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர். படி வழியாகவும் மக்கள் நடந்து சென்று தரிசனம் செய்தனர். வட மாநில மக்கள் அதிக அளவில் குடும்பமாக வந்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ