உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காஞ்சிகோவில், அந்தியூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிகோவில், அந்தியூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெருந்துறை:தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, த.வெ.க., அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி, கொங்கு நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெகநாதன் தலைமையில், லோகுசாமி, தனபாலன், நவீன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், வங்கி செயலாளர் கோபாலகிருஷ்ணனிடம் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.* அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், அந்தியூர் தொகுதி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இயக்க செயலாளர் கந்தசாமி, கொகை பரப்பு செயலாளர் தென்னை மயில்சாமி முன்னிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, கணபதி, மலைச்சாமி, ஜெகநாதன், தங்கவேல் உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை