வேனில் கடத்திய 1.2௫ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேனில் கடத்திய 1.2௫ டன் ரேஷன் அரிசி பறிமுதல்ஈரோடு:வேனில் கடத்தப்பட்ட ௧.௨௫ டன் ரேஷன் அரிசி, பவானி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., மேனகா, ஏட்டுகள் மணிகண்டன், சின்னுசாமி, முத்தழகன் ஆகியோர், பவானி - மேட்டூர் சாலையில் வாகன தணிக்கை செய்தனர்.ஊராட்சிகோட்டையில் வந்த டாடா-207 வாகனத்தை சோதனை செய்ததில், 50 கிலோ எடையில், 25 மூட்டைகளில், 1,250 கிலோ பொது வினியோக திட்டத்துக்கான ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த தண்டபாணியை, 51, கைது செய்தனர். பவானி மற்றும் வைரமங்கலம் பகுதி மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.