உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காங்கேயம்:காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், நகராட்சி துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். நகராட்சியில் உள்ள, 18 வார்டுகளிலும், குடிநீர் பிரச்னைகள் உள்ள பகுதிகளில் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். மின் மோட்டார் மற்றும் சிறு மின் விசைப்பம்புகளின் பழுதுகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட, 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வார்டுகளில் தடையின்றி குப்பை அள்ளப்பட வேண்டும். சாக்கடை சுத்தம் செய்ய வேண்டும். அம்ரூத் குடிநீர் திட்டத்தில் குழாய்கள் கவனிப்பாரற்றும், கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jinoj
ஏப் 25, 2025 10:09

காங்கேயம் நகராட்சி என்பது பல தசாப்தங்களாக மறுசீரமைப்பு செய்யப்படாமல் உள்ளது, அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் வரை நகரம் விரிவடைந்துள்ளது. நகர் மன்றம் 18 வார்டுகள் கொண்டுள்ள போதே 35 வார்டுகளுக்கு இணையான வருவாயைக் கொண்டு முதல்நிலை நகராட்சியாக உள்ளது. இதன் மக்கட்தொகை 1.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. வணிக நிறுவனங்கள், வங்கிகள், சிறு குறு நடுத்தர வணிக நிறுவனங்கள், உற்பத்தி கூடங்கள், தொழிற்சாலைகள் என நகரத்தில் எங்கும் தொழில்மயம் தான். ஆதலால் நகரத்தில் எல்லைக்குள் அமைந்துள்ள 4 கிராம ஊராட்சிகளை நகராட்சி உடன் இணைத்து 42 வார்டுகளை உருவாக்கி மென்மேலும் நகரத்தின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். அரசு கல்லூரி முதல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வரை பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகராட்சி காங்கேயம் நகராட்சி ஆகும்.


முக்கிய வீடியோ