கருங்கல்பாளையம் சந்தைக்கு வரத்தான 600 கால்நடைகள்
ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க வந்தனர். சந்தைக்கு, 6,000 முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை; 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடு; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகள் கொண்டு வரப்பட்டன.தீவன பற்றாக்குறை, கடும் வெயில், பசுந்தீவன விலை உயர்வால் மாடுகளை விற்க, விவசாயிகள் ஆர்வம் காட்டினர். சந்தைக்கு வரத்தான கால்நடைகளில், 90 சதவீதம் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.