மேலும் செய்திகள்
மண் கடத்திய லாரி பறிமுதல்
02-Feb-2025
மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
11-Feb-2025
மண் அள்ளிய 8 பேர் கைதுபவானி:பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால்ராஜ், 51; இவருக்கு சொந்தமாக தேவனாங்காடு என்ற இடத்தில் ஏழு ஏக்கர் நிலத்தில் சைட் அமைத்து, நேற்று முன்தினம் மாலை சமன் செய்யும் பணி நடந்தது. அப்பகுதியிலிருந்த மண்ணை சட்ட விரோதமாக கடத்தி செல்வதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மண் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரியை பிடித்தனர். போலீசார் விசாரணையில், மண் கடத்தல் உறுதியானது. இதை தொடர்ந்து, சைட்டுக்கு சென்ற போலீசார், மண் அள்ள பயன்படுத்திய இரண்டு ஜே.சி.பி., மற்றும் ஐந்து டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்த கோபால்ராஜ், ஆர்.என்.புதுார் ரமேஷ், 26; எடப்பாடி சக்திவேல், 23; ராஜா, 34; சங்ககிரி கண்ணன், 50; பர்கூர், துருசனாம்பாளையம் சித்தலிங்கம், 30; ஈரோடு விக்னேஷ், 30; எலவமலை பாலாஜி, 28; ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கோர்ட்டில் எட்டு பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
02-Feb-2025
11-Feb-2025