உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கண நேர விபத்தால் கோபியில் பரபரப்பு

கண நேர விபத்தால் கோபியில் பரபரப்பு

கோபி: கோபி பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருவர் பைக்கில் சத்தி சாலையை நோக்கி நேற்று காலை, 9:30 மணிக்கு சென்றார். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறிய அரசு டவுன் பஸ் மீது பைக் மோதியது. அவ்வழியே வந்த பாரத் பென்ஸ் என்ற சரக்கு லாரி, டவுன் பஸ் மீது மோதி நின்ற பைக் மீது மோதியது. விபத்தில் எவருக்கும், எந்த பாதிப்பும் இல்லை. பைக் மற்றும் லாரியை ஓட்டி வந்தவர்களின் விபரம் தெரியவரவில்லை. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்த விபத்தால், அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அங்கு நின்றிருந்த பஸ் கண்டக்டர்கள் சிலர், சரக்கு லாரியை ஓரங்கட்டி நிறுத்தி, நெரிசலில் அணிவகுத்து நின்றிருந்த வாகனங்களை வழியனுப்பி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ