உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதல்வர் மருந்தகம் திறப்பு

முதல்வர் மருந்தகம் திறப்பு

ஈரோடு: மாநில அளவில், 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில், ௩௬ இடங்களில், முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது. சோலாரில் முதல்வர் மருந்தகத்தை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். நிகழ்வில் எம்.பி.,க்கள் ஈரோடு பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், துணை பதிவாளர் காலிதாபானு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !