உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு கடந்த, 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருந்துறை அருகே நீர் கசிவு ஏற்-பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. மூன்று நாட்கள் கழித்து வாய்க்காலில் மீண்டும், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்-படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம், 1,500 கன அடியாக உயர்ந்தது. நேற்று, 1,700 கன அடியாக நீர்திறப்பு கூடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ