உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி தற்கொலையில் அந்தியூர் எஸ்.ஐ., இடமாற்றம்

தொழிலாளி தற்கொலையில் அந்தியூர் எஸ்.ஐ., இடமாற்றம்

அந்தியூர்: அந்தியூர் அருகே வட்டக்காட்டை சேர்ந்த தொழிலாளி சுப்ர-தீபன், 21; இவரின் உறவினர், பவானி அருகே பெரிய-மோளபாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார், 21; இவர் கடந்த ஆண்டு புது பைக் வாங்கினார். பைக்கை ஓட்டி பார்க்க சுப்ரதீபன் எடுத்து சென்றபோது விபத்தில் சிக்கினார்.வாகனம் பழுது பார்க்க, ௮௦ ஆயிரம் ரூபாய் செலவானது.அதில் பாதி தொகையை தருவதாக சுப்ரதீபன் தெரிவித்-துள்ளார். ஆனால், சொன்னபடி தரவில்லை. இதனால் இருவ-ருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. சசிகுமார் தனது கூட்டாளிக-ளுடன் சேர்ந்து சுப்ரதீபனை, கடந்த ஜூன் மாதம் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுப்ரதீபன், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இதுகுறித்து தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி, அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா காட்சி ஆதாரத்துடன், சுப்ரதீபன் புகார் தந்தார். புகாரில் உண்மை தன்மை இல்லை எனக்கூறிய அந்தியூர் போலீசார், அதற்குண்-டான நோட்டீசை சுப்ரதீபன் வீட்டில் ஒட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சுப்ரதீபன், சில நாட்களுக்கு முன் வீட்டில் துாக்-கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அந்தியூர் அரசு மருத்துவமனையில், உடற்கூறு ஆய்வுக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.அப்போது சுப்ரதீபன் தற்கொலைக்கு காரணமான எஸ்.ஐ., தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, உறவினர்கள் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உறுதியை தொடர்ந்து, சட-லத்தை பெற்று சென்றனர்.இந்நிலையில் சசிக்குமார் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அதேச-மயம் புகாருக்கு ஆளான எஸ்.ஐ., தனபால், பவானிசாகர் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை