தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்ஈரோடு:எஸ்.டி.டி.யு., (சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்) தொழிற்சங்கத்தினர் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தஸ்தகீர் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநில பொருளாளர் ஹசன் பாபு கோரிக்கைகளை விளக்கி பேசினர். எட்டு மணி நேர வேலையை, 12 மணி நேரமாக்க கூடாது. தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை சிதைக்க கூடாது. நிரந்தர பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக மாற்ற கூடாது. திருத்தப்பட்ட தொழிலாளர் விரோத சட்டம்-65-ஏ வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.