காசநோய் பரிசோதனை
காசநோய் பரிசோதனைஈரோடு:சிவகிரி, கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட, கருமாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, காசநோய் கண்டறிதல் முகாம் நடந்தது. டாக்டர் மணிவண்ணன் தலைமையில், 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின் நடமாடும் எக்ஸ்ரே கருவி மூலம், நெஞ்சக ஊடுகதிர், சளி பரிசோதனை மேற்கொண்டனர். மேற்பார்வையாளர் பாலகுமார், தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.