மேலும் செய்திகள்
வர்த்தக நிலரம்
31-Mar-2025
உள்ளூர் வர்த்தக செய்திகள்* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் முல்லை ஒரு கிலோ பூ-1,340 ரூபாய்க்கு ஏலம்போனது. மல்லிகை-1,205, காக்கடா-1,100, செண்டுமல்லி- 96, கோழிகொண்டை-115, கனகாம்பரம்-560, சம்பங்கி-160, அரளி-180, துளசி-50, செவ்வந்தி-320 ரூபாய்க்கும் விற்பனையானது.* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 448 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 168.30 முதல், 184.59 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 130.42 முதல், 175.89 ரூபாய் வரை, 19,299 கிலோ கொப்பரை தேங்காய், 31 லட்சத்து, 91,831 ரூபாய்க்கு விற்பனையானது.*ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை ஜவுளி சந்தை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில மக்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் அதிகம் வந்தாலும், மொத்த ஜவுளி விற்பனை குறைவாகவே நடந்தது.அதேசமயம் கோவில் விழா, முகூர்த்தம் போன்ற காரணத்தால் சில்லறை விற்பனை, 25 முதல், 30 சதவீதம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 ஆயிரம் கிலோ, தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 182.08 ரூபாய்; குறைந்தபட்சம், 96.89 ரூபாய் என, 49.90 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
31-Mar-2025