மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தன நிகழ்வு
27-Mar-2025
அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் கொடியேற்றம்அந்தியூர்:அந்தியூர், பத்ரகாளியம்மன் பங்குனி குண்டம் மற்றும் தேர்த் திருவிழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து மகிஷாசுரவர்தனம் எனும் எருமைக்கிடா வெட்டும் நிகழ்வு நடந்தது.இந்நிலையில், நேற்று காலை அந்தியூர் முத்துக்குமாரசாமி கோவிலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி, சிங்கார வீதி, தேர்வீதி, பர்கூர் ரோடு வழியாக, பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பெண்கள், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.அதன்பின் கொடியேற்றும் நிகழ்வு நடந்தது. வரும், 9ல் குண்டம் திருவிழா, 11 லிருந்து 14 வரை தேரோட்டம் நடக்கிறது,
27-Mar-2025