கடன் தொல்லையால்தொழிலாளி தற்கொலை
கடன் தொல்லையால்தொழிலாளி தற்கொலைஈரோடு:பவானி, தொட்டிபாளையம், மோள கவுண்டன் புதுரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 40, தொழிலாளி. பழனியம்மாள் என்ற மனைவி, ஒரு மகள் உள்ளனர். கோவிந்தராஜுக்கு மது பழக்கம் உள்ளது. பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத விரக்தியில் இருந்தார். கொடுமுடி அருகே இச்சிபாளையத்தில் உள்ள தாயை பார்க்க கடந்த, 6ல் சென்றார். அங்கு மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார். கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் உயிரிழந்தார். கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.