உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

கல்லுாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில், திண்டலில் தனியார் கல்லுாரி முன் வாயிலில் முழக்க போராட்டம் நேற்று நடந்தது. செயலாளர் சவுந்தர்யா தலைமை வகித்தார். அரசு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் மயமாக்குவதும், அவற்றை தனியார் வசம் வழங்கி பல்கலை கழகமாக மாற்றுவதாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை மசோதா தாக்கல் செய்கிறது. இதை திரும்ப பெற வேண்டும். இதன் மூலம் நீண்ட காலமாக போராடி பெறப்பட்ட அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் செயல்பாடு, மாணவர், ஆசிரியர் நலன்கள் பாதிக்கப்படும். ஒருவேளை மசோதா நிறைவேற்றப்பட்டால், கல்லுாரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனக்கூறினர். நிர்வாகிகள் சாத்தப்பன், பசுபதி, கோகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை