சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா
சத்தியமங்கலம்:விதைகள் வாசகர் வட்டம், ஸ்ரீசுந்தர் மஹால் இணைந்து ஒன்பதாம் ஆண்டு புத்தக திருவிழா, சத்தியமங்கலத்தில் கடந்த, 10ம் தேதி தொடங்கியது. கண்காட்சியில் தினமும் மாலையில், ஒருவர் சிறப்பு தலைப்பில் பேசுகிறார். இன்று நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.நாளை த.மு.எ.க., சங்கத்தின் மாநில துணை தலைவர் முத்து நில வன், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ... இப்படிக்கு தமிழ் என்ற தலைப்பில் பேசுகிறார். 15ம் தேதி இரவு திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி நிறைவு விழா பேருரையாற்றுகிறார். கண்காட்சியில் நித்யா இறையன்பு, கல்யாணசுந்தரம், எழுத்தாளர் கவிதா ஈஸ்வரன், பவுசியா இக்பால் ஆகியோர் எழுதிய நுால்களும் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. கண்காட்சியில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகத்தினர் அரங்கு அமைத்துள்ளனர். திருவிழா ஏற்பாடுகளை விதைகள் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், ஸ்ரீசுந்தர் மஹால் உரிமையாளர் சுந்தரம் செய்கின்றனர்.