உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூடுதுறையில் குளியலறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

கூடுதுறையில் குளியலறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

கூடுதுறையில் குளியலறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடுபவானி:பவானி கூடுதுறையில், குளியலறையுடன் கூடிய கழிப்பறை அமைக்க, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பிரசித்த பெற்ற பவானி கூடுதுறைக்கு, விசேஷ தினங்களில் பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்ய வருவர். குறிப்பாக ஆடி, தை அமாவாசை தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, திதி, தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடி தரிசனம் செய்வர். பக்தர்களின் வசதிக்காக குறைந்த அளவில் குளியலறை மற்றும் கழிப்பறை தனித்தனியே உள்ள நிலையில், பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி, கூடுதலாக குளியலறையுடன் கூடிய கழிப்பறை அமைத்து தர வேண்டும் என, கடந்த மாதம் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.இதையடுத்து கோரிக்கையை ஏற்ற அரசு, புதிய குளியலறையுடன் கூடிய கழிப்பறை அமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர், கூடுதுறையில் ஆய்வு செய்து விரைவில் பணி துவங்குவர் என, நகர்மன்ற தலைவர் சிந்துாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை