கொங்காலம்மன் கோவிலில்108 சங்காபிஷேக விழா
கொங்காலம்மன் கோவிலில்108 சங்காபிஷேக விழாஈரோடு:ஈரோடு, கொங்காலம்மன் கோவிலில் நேற்று வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.ஈரோடு, கொங்காலம்மன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 2ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 9ல் பொங்கல் வைத்தல் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாநகரின் முக்கிய வீதிகள் வழியே தேர் சென்று பின்னர் நிலையை அடைந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு விடையாற்றி உற்சவம், மஞ்சள் நீராடல், அம்மன் வீதி உலா, 11:00 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.