ஆவின் பூத்தில் திருடிய 2 சிறுவர்கள் கைது
ஈரோடு: ஈரோடு, காசிபாளையம் ஸ்ரீகார்டன் மரகதம் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 64; முத்தம்பாளையம் பகுதி-1ல் ஆவின் பால் பூத் நடத்தி வருகிறார். பூத்தில் காப்பகத்துக்காக நன்கொடை வசூ-லிக்க உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் உண்-டியல் திருடு போனது. ஈரோடு தாலுகா போலீசில், மாரிமுத்து புகாரளித்தார். இதன்படி விசாரித்த போலீசார், 16 மற்றும் 17 வய-தான இரு சிறுவர்களை கைது செய்தனர்.