உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலுக்கு சொந்தமான ரூ.32 கோடி மதிப்பிலான31.93 ஏக்கர் நிலம் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

கோவிலுக்கு சொந்தமான ரூ.32 கோடி மதிப்பிலான31.93 ஏக்கர் நிலம் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

சென்னிமலை:சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உப கோவிலான முகாசிபிடாரியூர், திருமுக மலர்ந்த நாதர் மற்றும் திருக்கை நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம், அட்டவணை பிடாரியூர் வருவாய் கிராமத்தில், 31.93 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்நிலத்தை, 12 பேர், 42 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்திருந்தனர். இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணை நடந்தது.இறுதியாக ஈரோடு இணை ஆணையர் விசாரணை நீதிமன்றத்தில், 14 மனுக்களின் படி விசாரணை நடந்து இறுதி உத்தரவை தொடர்ந்து, கடந்த ஜன., ௯ல் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்தும், ௧௨ பேரும் நிலங்களை ஒப்படைக்கவில்லை.இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமையிலான அறங்காவலர் குழுவினர், வருவாய் துறையினர், காவல்துறையினர், சிறப்பு பணித்துறை அலுவலர்கள் நேற்று ஒருங்கிணைந்து, 12 ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்றினர். நிலத்தை கோவில் சுவாதீனத்தில் கொண்டு வந்ததுடன், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அறிவிப்பு பலகையும் வைத்தனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட, 31.93 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 32 கோடி ரூபாய் என்று, இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ