உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் அன்னதான உணவை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

கோவில் அன்னதான உணவை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

காங்கேயம், காங்கேயம் அருகே காடையூர், ஸ்ரீகாடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அன்னதான உணவு தயாரிக்கும் இடம், மூலப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் இடம் மற்றும் உணவு வழங்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். உணவுப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும், முறையாக பாதுகாப்பாக சேமித்து வைத்து பயன்படுத்தட வேண்டும். தயாரிப்பில் ஈடுபடுவோர் தன்சுத்தம் பேணுதல் மற்றும் பாதுகாப்பு உபகரணம் அணிய வலியுறுத்தினர். அன்னதானத்துக்காக தயாரிக்கப்படும் உணவு மாதிரிகளையும் கண்டிப்பாக எடுத்து வைக்க அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை