உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி கோவிலில் ரூ.1.05 கோடி காணிக்கை

பண்ணாரி கோவிலில் ரூ.1.05 கோடி காணிக்கை

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் வெகு விமரிசையாக தீ மிதி விழா நடந்தது. இந்நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்களை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் பணமாக ஒரு கோடியே ஐந்து லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர், கோவில் ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி