நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மறியல்
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் யூனியன் புங்கார் பஞ்., புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, சுஜில்குட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். ஊதியம் குறைவாக வழங்குவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர்ந்து பணி வழங்குவதில்லை என்று கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், காராச்சிக்-கொரை பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சாலை மறியலில் ஈடு-பட்டனர். பவானிசாகர் போலீசார் மற்றும் பிடிஓக்கள் உரிய நட-வடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, மறியைலை கைவிட்டனர். இதனால் பவானிசாகர்-பண்ணாரி சாலையில், ௩௦ நிமிடம் போக்-குவரத்து பாதிக்கப்பட்டது.