மேலும் செய்திகள்
உணவு வினியோக ஊழியர்கள் உறுப்பினராக சேர அழைப்பு
31-Jul-2024
ஈரோடு, ஆநலவாரியத்தில் வீட்டு பணியாளர்களும் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம். இதுபற்றி ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:தமிழகத்தில் உடலுழைப்பு தொழிலாளர் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. இதுபோல, 19 தொழிலாளர் நலவாரியம் செயல்படுகிறது. இதில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர், வீட்டு பணியாளர் நலவாரியத்தில், www.tnuwwb.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். பதிவு ஒப்புதலானதும், நலவாரிய அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். விபரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை நேரில் அல்லது, 0424 2275591, 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
31-Jul-2024