உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹோட்டலில் திருட்டு

ஹோட்டலில் திருட்டு

ஹோட்டலில் திருட்டுஈரோடு:ஈரோடு, நாடார்மேட்டை சேர்ந்தவர் சிவக்குமார். அதே பகுதியில் பூமா என்ற பெயரில் ஹோட்டல் நடத்துகிறார். நேற்று காலை ஹோட்டலின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடை திறக்க வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, சிவக்குமாருக்கு தகவல் தந்தனர். அவர் சென்று பார்த்தபோது மேஜை டிராயரில் பூட்டு போட்டு வைத்திருந்த, 48 ஆயிரம் ரூபாய், மொபைல்போன் திருட்டு போனது தெரிய வந்தது.புகாரின்படி சூரம்பட்டி போலீசார் ஹோட்டலில் ஆய்வு செய்தனர். ஹோட்டலுக்குள் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. செயல்படாததால் திருடனை அடையாளம் காண முடியவில்லை. பிற பகுதிகளில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ