உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நடுநிலைப்பள்ளியில்முப்பெரும் விழா

நடுநிலைப்பள்ளியில்முப்பெரும் விழா

நடுநிலைப்பள்ளியில்முப்பெரும் விழாசென்னிமலை:இந்திய சுதந்திர போராட்ட விடுதலை வீரர் தியாகி குமரன் படித்த, சென்னிமலை நகர ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நுாற்றாண்டு விழா, இலக்கிய மன்ற விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் வாசுகி வரவேற்றார். ஆசிரியர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவிஅசோக், கவுன்சிலர்கள் குமார், விஜயலட்சுமி சுகுமார் பரிசு வழங்கினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்சி நடந்தது. இதேபோல் முருங்கத்தொழுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிலும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ