உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொலையாளிக்குகுண்டாசில் சிறை

கொலையாளிக்குகுண்டாசில் சிறை

கொலையாளிக்குகுண்டாசில் சிறைஈரோடு:பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த கணேஷ் மகன் கவுரி சங்கர், 22, திருமணம் ஆனவர். கூலி தொழிலாளி. பவானியில் நடந்த கொலையில் தொடர்புடையவர். பவானி போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சங்ககிரியில் நடந்த கொலையிலும் தொடர்பிருப்பது தெரிந்தது. இதனால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு எஸ்.பி., மூலம், பவானி போலீசார் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றதால், கவுரிசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுகுறித்த நகலும் அவரிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ