நீதிமன்றம் புறக்கணிப்பு
ஈரோடு:வக்கீல் குமரன் மீது தாக்குதல் நடத்திய, ஆதமங்கலம் புதுார் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் செயலை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை கோரியும், ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் குருசாமி தலைமையில், 250 பெண் வக்கீல் உள்ளிட்ட 970 பேர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.