ஆடிட்டருக்கு அஞ்சலி
தாராபுரம்: சேலத்தில், ௨௦௧௩ல் படுகொலை செய்யப்பட்ட, பா.ஜ., மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினமான நேற்று, தாராபுரம் பா.ஜ., அலுவலகத்தில், அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் சுகுமார், தாராபுரம் நகர தலைவர் ரங்கநாயகி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.