மேலும் செய்திகள்
நிலக்கடலைக்கு கூடுதல் விலை
08-Oct-2025
பவானி, அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், செவ்வாய்கிழமை தோறும் நிலக்கடலை, தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம் நடக்கிறது. இதில் கடந்த செவ்வாய் கிழமை, 15 விவசாயிகள் நிலக்கடலை கொண்டு வந்து ஏலத்தில் விற்றனர். நேற்று வரை வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கவில்லை. ஒரு வாரம் கடந்தும் பணம் வரவு வைக்கப்படாததால், தினமும் விவசாயிகள் சொசைட்டிக்கு வந்து செல்கின்றனர். சர்வர் பிரச்னையே இதற்கு காரணம் என்றும், இதை தாங்கள் கவனித்து வருவதாகவும், நாளைக்குள் (இன்று) தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும் என்றும், விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
08-Oct-2025