உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் 13 சார்பதிவாளர் இடமாற்றம்

மாவட்டத்தில் 13 சார்பதிவாளர் இடமாற்றம்

ஈரோடு:தமிழகத்தில், பதிவு சார் நிலை பணியின் கீழ், 132 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தில், 13 பேர் மாற்றப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு: ஈரோடு சார் பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்) விமலாதேவி - அம்மாபேட்டை சார்பதிவாளர்; ஈரோடு சார்பதிவகம் 2ம் எண் இணை சார் பதிவாளர் பாஸ்கரன் - திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சார்பதிவகம்; டி.என்.பாளையம் சார்பதிவாளர் சங்கீதா - திருப்பூர் சார்பதிவகம் எண்-2 இணை சார்பதிவாளர். அந்தியூர் சார்பதிவாளர் ஜெகதீசன் - கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் சார் பதிவகம்; கோபி சார் பதிவகம் எண்-2 இணை சார்பதிவாளர் ராமதிலகம் - திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் சார் பதிவகம்; கோபி சார் பதிவாளர் (நிர்வாகம்) மஞ்சுளா - தஞ்சை வல்லம் சார்பதிவகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் சார் பதிவாளர் பிரீத்தி - ஈரோடு சூரம்பட்டி சார்பதிவகம்; திருப்பூர் மாவட்டம் கணியூர் சார்பதிவாளர் கண்ணன் - டி.என்.பாளையம் சார்பதிவகம்; திருப்பூர் சார் பதிவகம் எண் - 2 இணை சார்பதிவாளர் நிசார் அகமது - கோபி சார் பதிவகம் எண்-2 இணை சார் பதிவாளர்; திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்ரபட்டி சார்பதிவாளர் கமலக்கண்ணன் - கொடுமுடி சார்பதிவகம்; சேலம் கிழக்கு சார்பதிவாளர் (நிர்வாகம்) புவனேஸ்வரி - கோபி சார் பதிவகம் எண் - 1 இணை சார்பதிவாளர்; சேலம் துணை பதிவுத்துறை சார்பதிவாளர் (நிர்வாகம்) கலாவதி - ஈரோடு சார்பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்); திருப்பூர் மாவட்டம் கோமங்கலம் சார்பதிவாளர் சிவகுமார் - நம்பியூர் சார்பதிவகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை