உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துப்புரவு தொழிலாளி உள்பட 2 பேர் விபரீத முடிவு

துப்புரவு தொழிலாளி உள்பட 2 பேர் விபரீத முடிவு

சென்னிமலை, சென்னிமலை பேரூராட்சியில் துாய்மை தொழிலாளியாக பணிபுரிந்தவர் செந்தில், 47; உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள துப்புரவு தொழிலாளர் காலனியில் வசித்தார். இவரின் மனைவி தெய்வானை.இவர்களின் மகன் நந்தகுமார், 22; மது போதைக்கு அடிமையான செந்தில், தினமும் குடிபோதையில் வீட்டில் தகராறு செய்து வந்தார். மனைவியும் குடிப்பழக்கத்தை கண்டித்து வந்த நிலையில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெய்வானை புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.* பெருந்துறையை அடுத்த சீனாபுரம், எல்லபாளையத்தை சேர்ந்த தறித்தொழிலாளி செல்வராஜ், 30; இவரின் மனைவி பத்மாதேவி, 25; தம்பதிக்கு மூன்று வயதில் மகன், ௧௧ மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மாலை, சினிமாவுக்கு போகலாம் என்று பத்மாதேவி கேட்டுள்ளார். இதற்கு செல்வராஜ் மறுப்பு தெரிவிக்கவே, வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் பத்மாதேவி குதித்ததில் இறந்து விட்டார். பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சடலத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை