ரூ.3 லட்சம் மதிப்பிலானமக்காச்சோள விதை முடக்கம்
ரூ.3 லட்சம் மதிப்பிலானமக்காச்சோள விதை முடக்கம்ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், விவசாயிகளுக்கு தரமான மக்காச்சோளம் விதைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், போலி விதை விற்பனையை தடுக்கவும், மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையில், ஈரோடு, சத்தி, கோபி, பவானி, தாராபுரம் பகுதியில், 12 தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வர்கள் ஆய்வு செய்தனர். இதில் முறையான ஆவணங்கள் இல்லாத, 560 கிலோ எடை கொண்ட வீரிய மக்காச்சோளம், காய்கறி விதைகளை விற்க தடை விதித்தனர். இதன் மதிப்பு, 3.03 லட்சம் ரூபாய்.விதை விற்பனையாளர்கள், பகுப்பாய்வு முடிவு அறிக்கை பெறாத விதை குவியலை விற்கக்கூடாது. விதை விற்பனை ரசீதில் உரிய விபரம் இருக்க வேண்டும். விதை பாக்கெட்டுகளை உடைத்து சில்லறை விற்பனை செய்யக்கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, துணை இயக்குனர் சுமதி தெரிவித்துள்ளார்.