மேலும் செய்திகள்
இளநிலை உதவியாளர்களுக்கு பணி ஆணை
10-Mar-2025
குரூப்-4 தேர்வில் வெற்றி8 பேருக்கு பணி ஆணைநாமக்கல்:தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 2024 ஜூனில், குரூப்--4 போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்ற பணி நாடுனர்களில், பள்ளி கல்வித்துறையில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நேற்று நடந்தது.இதில், எட்டு பேர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை கல்வி) சிவா, கவுன்சிலிங்கை நடத்தினார். அவற்றில், வெண்ணந்துார் வட்டார கல்வி அலுவலகத்தில் காலியாக இருந்த பணியிடத்தை, ஒருவர் தேர்வு செய்தார். மீதமுள்ள, ஏழு பேர், பக்கத்து மாவட்டங்களில், பணியிடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
10-Mar-2025