ஏப்., 7, 8, 14ல் சிறப்பு பஸ்கள்: பண்ணாரி குண்டத்துக்காக இயக்கம்
ஏப்., 7, 8, 14ல் சிறப்பு பஸ்கள்: பண்ணாரி குண்டத்துக்காக இயக்கம்ஈரோடு:ஈரோடு மாவட்டம், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் ஏப்., 7, 8ல் நடக்கிறது. அவ்விழாவின் மறுபூஜை ஏப்., 14ல் நடக்க உள்ளது.இவ்விழாவுக்காக, ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏப்., 7, 8 மற்றும், 14 ஆகிய நாட்களில் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, மைசூரு, நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு இயக்கப்படுகிறது என, அரசு போக்குவரத்து கழக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.