உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு

8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு

8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்புதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணைந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.கடந்த, அக்., மாதம் துவங்கிய கணக்கெடுப்பு பணி, இம்மாதம், 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை என மூன்று கோட்டங்கள் உள்ளன.திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் டாக்டர் பிரகாசம் கூறியதாவது:மாவட்டம் முழுக்க, 8 லட்சத்து 59 ஆயிரத்து 251 வீடுகளில் கால்நடை கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வீடுகள் அல்லாத வியாபார நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும், கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 247 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட அனைத்து கால்நடைகள் துவங்கி, விவசாய உபகரணங்களும் கணக்கெடுக்கப்படும். இதுவரை, 85 சதவீதம் அளவுக்கு கணக்கெடுப்புப்பணி நிறைவு பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை