உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண் அறங்காவலரின்பேரன் மீது திருட்டு புகார்

பெண் அறங்காவலரின்பேரன் மீது திருட்டு புகார்

ஈரோடு;ஈரோடு, பத்ரகாளியம்மன் கோவில், நிலவு கால்களில் பொருத்தப்பட்டிருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை தகடுகளை, அறங்காவலரின் பேரன் திருடி விட்டதாக, கள்ளுக்கடை மேடு மக்கள் சார்பில், இணை ஆணையர் பரஞ்ஜோதியிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. மனு விபரம்: கள்ளுக்கடை மேட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் நிலவு கால்களில், பித்தளை தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு, 4 லட்சம் ரூபாய் இருக்கும். தற்போது கோவிலில் திருப்பணி நடந்து வரும் நிலையில், பித்தளை தகடுகளை கோவில் நிர்வாகத்தினர் கழற்றி வைத்திருந்தனர். கோவில் அறங்காவலர் தங்காயம்மாளின் பேரன் பிரதீப், பித்தளை தகடுகளை எடுத்து சென்று விற்பனை செய்துள்ளார். பிரதீப் மீது அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதீப்பிடம் கேட்டபோது, 'இது பொய் புகார்' என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை