உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்

கொடுமுடியில் புனித நீராடிய பக்தர்கள்

கொடுமுடி: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.ஆடி மாதம் முதல் நாள் தலை ஆடி என சிறப்பானதாகக் கருதப்-படுகிறது. இந்நாளில் புதுமணத்தம்பதியர், நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொடுமுடி காவிரியில் புனித நீராடி மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ