உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாதுகாப்பற்ற நிலையில் மின் இணைப்பு

பாதுகாப்பற்ற நிலையில் மின் இணைப்பு

ஈரோடு, ஈரோட்டில் ஈ.வி.என்., சாலையில் இருந்து பாரதி மருத்துவமனை வீதி, விநாயகர் கோவில் பின்புறம் பாதுகாப்பற்ற நிலையில் மின் இணைப்பு ஒயர் 'இன்சுலேஷன் டேப்' சுற்றப்பட்டுள்ளன.தெரு விளக்குக்கான இணைந்த மின் இணைப்பு மிகப்பெரிய கேபிள் ஒயர் இணைப்புடன் கொண்டு வரப்பட்டு, மின் கம்பத்துடன் இணைக்கும்போது, வேறு ஒயரை இணைத்து, 'இன்சுலேஷன் டேப்' மட்டும் சுற்றி உள்ளனர். கடந்த பல மாதங்களாக இந்நிலை உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பணி நடந்த போதே, வெளியே தெரியும் வகையில் ஒயரை இணைக்க வேண்டாம் என கேட்டோம். அதை மீறி பாதுகாப்பற்ற நிலையில் விட்டு சென்றனர். பூனை, நாய், மாடு போன்றவை அவற்றில் வாய் வைத்தால், மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. மழை நேரம் அல்லது வாகனங்கள் உரசும் போது விபத்துக்கு வாய்ப்புள்ளது. விபரீதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.இதுபற்றி மின்வாரிய பொறியாளர்களிடம் கேட்டபோது, 'இது, மின்வாரியத்துடையதுல்ல. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குக்கான கேபிள் ஒயராகும். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறுகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை